​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது - சுப்பிரமணிய சாமி பேச்சு

Published : Dec 08, 2019 6:12 PM

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது - சுப்பிரமணிய சாமி பேச்சு

Dec 08, 2019 6:12 PM

நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

விராத் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் பாஜக மூத்த தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணிய சுவாமியின் 80வது பிறந்தநாள் விழா மற்றும் பாராட்டு விழா மதுரை வர்த்தக மைய கட்டிடத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய சுப்ரமணிய சாமி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே டி.என்.ஏ தான் என்றார். மேலும் தமிழகத்திற்கு புதிய தலைமை உருவாகும் எனவும், அதற்கு தனது உதவி இருக்கும் எனவும் அவர் கூறினார்.