​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவுக்கான கடன் மேலும் குறைக்கப்படும் - உலக வங்கி திடீர் அறிவிப்பு

Published : Dec 08, 2019 3:02 PM

சீனாவுக்கான கடன் மேலும் குறைக்கப்படும் - உலக வங்கி திடீர் அறிவிப்பு

Dec 08, 2019 3:02 PM

சீனாவுக்கு அளிக்கும் கடன் உதவியை மேலும் குறைக்க போவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் ஆகியவற்றுக்கு உலக வங்கியால் பல திட்டங்களுக்கு கடன் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சீனாவுக்கும் வளரும் நாடு என்ற முறையில் உலக வங்கி கடன் அளித்து வருகிறது. அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், சீனாவிடம் அதிகளவில் நிதி இருப்பதாகவும், ஆதலால் கடன் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க பொருளாதார விவகாரத்துறை முன்னாள் அதிகாரி டேவிட் மால்பாஸ் தலைமையில் செயல்படும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்கெனவே சீனாவுக்கு கடன் அளிப்பது பலமடங்கு குறைந்து விட்டது, வரும் காலத்தில் மேலும் அது குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. வளர்ந்து விட்ட நாடுகளுக்கு கடனை நிறுத்த போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.