​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடுமுழுவதும், சிறைகளில் கைதிகளை மாடு வளர்க்கச் சொல்ல வேண்டும்-ஆர்எஸ்எஸ்

Published : Dec 08, 2019 2:14 PM



நாடுமுழுவதும், சிறைகளில் கைதிகளை மாடு வளர்க்கச் சொல்ல வேண்டும்-ஆர்எஸ்எஸ்

Dec 08, 2019 2:14 PM

பசு மாடுகளை வளர்ப்பதால், கைதிகளின், குற்ற மனநிலை, நன்றாக குறைவதாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார்.

புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது, இந்த கருத்தினை அவர் கூறியிருக்கிறார். பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள ஜெயிலர்கள் தம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் மூலம், கைதிகளின் குற்ற மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, தம்மால் அறிந்து கொள்ள முடிந்திருப்பதாகவும் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார்.

இதனால், நாடு முழுவதும் உள்ள சிறைகளில், பசு மாடுகள் வளர்ப்பதை கைதிகளிடம் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கேட்டுக்கொண்டிருக்கிறார்.