​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Facebook உதவியால் 4 வயதில் காணாமல்போன சிறுமி 16 வயதில் குடும்பத்துடன் இணையும் நெகிழ்ச்சி

Published : Dec 08, 2019 2:09 PM

Facebook உதவியால் 4 வயதில் காணாமல்போன சிறுமி 16 வயதில் குடும்பத்துடன் இணையும் நெகிழ்ச்சி

Dec 08, 2019 2:09 PM

4 வயதில் காணாமல்போன சிறுமி ஒருவர், ஃபேஸ்புக் உதவியால் 12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணையவுள்ளார்.

ஆந்திராவில் விஜயநகரத்தைச் சேர்ந்த பவானி என்ற 16 வயது சிறுமி, தனது 4 வயதில் காணாமல்போன நிலையில், விஜயவாடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், வம்சி கிருஷ்ணா என்பவரின் வீட்டிற்கு வீட்டு வேலை கேட்டு பவானி சென்ற நிலையில், அங்கு அவரிடம் அடையாள ஆவணங்கள் கேட்கப்பட்டன.

அப்போது, தான் சிறு வயதில் தொலைந்த கதையை வம்சி கிருஷ்ணாவிடம் பவானி கூறியுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் குறித்த சிறு சிறு தகவல்களை கேட்டுப்பெற்ற வம்சி கிருஷ்ணா, அவற்றைக்கொண்டு பேஸ்புக் மூலமாக தேடி, அவரது சகோதரரின் ஃபேஸ்புக் அக்கவுண்டை கண்டுபிடித்தார்.

பின்னர் வீடியோ காலில் பவானியின் குடும்பத்தினர் தொடர்புகொள்ளப்பட்டு, பவானி குறித்த அடையாளங்கள் உறுதிபடுத்தப்பட்டன. இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்துடன் சிறுமி பவானி மீண்டும் இணையவுள்ளார்.