​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது

Published : Dec 08, 2019 12:27 PM

முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது

Dec 08, 2019 12:27 PM

ள்ளக்குறிச்சி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்து,  பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வராயன் அருகே மலையரசன்பட்டு கிராமத்தை சேர்ந்த உறவினர்களான பழனி மற்றும் மாணிக்கம் ஆகியோருக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 4ம் தேதி பழனியின் மகன் மதியழகனை, மாணிக்கத்தின் குடும்பத்தார் கூட்டாக சேர்ந்து மிளகாய் பொடி தூவி மடக்கி பிடித்து அரிவாள், கம்பிகளை கொண்டு தாக்கி கொலை செய்துவிட்டு, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக மதியழகனின் தந்தை அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் மாணிக்கம், அவரது மனைவி பழனியம்மாள், மகன் ராமேஸ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மாணிக்கத்தின் மருமகன் சகாதேவன், உறவினர் தீர்த்தன் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.