​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அஜித்பவாரின் திட்டங்கள் அனைத்தும் சரத்பவாருக்கு தெரியும் - தேவேந்திர பட்னாவிஸ்

Published : Dec 08, 2019 12:00 PM

அஜித்பவாரின் திட்டங்கள் அனைத்தும் சரத்பவாருக்கு தெரியும் - தேவேந்திர பட்னாவிஸ்

Dec 08, 2019 12:00 PM

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவளித்தது தொடர்பான அஜித்பவாரின் திட்டங்கள் அனைத்தும் சரத்பவாருக்கு தெரியும் என முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக தன்னை சந்தித்த அஜித்பவார், சரத்பாவாரின் ஆலோசனைப்படியே இந்த முடிவை எடுத்ததாக தம்மிடம் கூறினார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பவில்லை என்றும், மூன்று கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணி ஆட்சி நிலையானதாக இருக்காது என்றும் அஜித்பவார் தம்மிடம் தெரிவித்தார் எனவும் பட்னாவில் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு சரத்பாவரும் பேட்டி ஒன்றில், அஜித்பவார் பட்னாவிசை சந்தித்தது தமக்கு தெரியும் எனவும், ஆனால் ஆட்சியமைக்க முடிவு செய்தது குறித்து எதுவும் தெரியாது எனவும் கூறியிருந்தார்.