​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடிக்கும் பவானிசாகர் அணை

Published : Dec 08, 2019 10:25 AM

கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடிக்கும் பவானிசாகர் அணை

Dec 08, 2019 10:25 AM

பவானிசாகர் அணை கடந்த ஒரு மாத காலமாக முழு கொள்ளளவில் நீடித்து வரும் நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானி சாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த நவம்பர் 8ம் தேதி முழுக்கொள்ளவை எட்டிய பவானி சாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 102 அடியாக உள்ளது. பவானி ஆற்றில் ஆயிரம் கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 100 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 100 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் 2ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.