​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: இடைத்தரகர் கைது

Published : Dec 08, 2019 7:48 AM

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: இடைத்தரகர் கைது

Dec 08, 2019 7:48 AM

தேனியில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் முதன்முறையாக நேற்று இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் இதுவரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தர்மபுரியை சேர்ந்த எல்ஐசி ஏஜண்ட் முருகன் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதை கண்டுபிடித்த சிபிசிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் இடைத்தரகராக செயல்பட்டது உறுதிபடுத்தப்பட்டது.இந்நிலையில் இன்று அவர் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.