​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயில் பணியின் போது 4 கடைகள் சேதம்

Published : Dec 08, 2019 7:42 AM

மெட்ரோ ரயில் பணியின் போது 4 கடைகள் சேதம்

Dec 08, 2019 7:42 AM

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணியின் போது  பூமிக்கு அடியில் ராட்சத ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டிய போது 4 கடைகள் சேதமடைந்து  சாய்ந்தன.

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை தற்போது மெட்ரோ ரயில்  திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோவில் தெருவில்  மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான பணி நடைபெற்றது.

அப்போது  ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது உண்டான அதிர்வில் திடீரென அந்த பகுதியில் உள்ள 4 கடைகளில்  விரிசல் ஏற்பட்டு சுவர்கள் சாய்ந்து விழுந்தன.  சரியான முறையில் கட்டுமானப் பணிகளை உரிய முறையில் கையாள வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.