​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இதய நோயாளியை அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு - மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

Published : Dec 08, 2019 7:32 AM



இதய நோயாளியை அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு - மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

Dec 08, 2019 7:32 AM

உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

ராம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் இதய நோய் தொடர்பாக நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் வேறு மருத்துவமனைக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை அடித்து உடைத்தனர். இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகளை வைத்து ராம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.