​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ரசிகர்களின் நம்பிக்கை வீண்போகாது" - ரஜினிகாந்த்

Published : Dec 08, 2019 6:07 AM



"ரசிகர்களின் நம்பிக்கை வீண்போகாது" - ரஜினிகாந்த்

Dec 08, 2019 6:07 AM

ரசிகர்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்கள் தமது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

தம்மை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை ஏமாற்றியது இல்லை என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், அதேபோன்று ரசிகர்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது என்று தெரிவித்தார்.

தமிழக அரசு மீது பல விமர்சனங்களை தாம் தெரிவித்திருந்த போதிலும், இசை வெளியீட்டு விழாவை நேரு விளையாட்டு அரங்கில் நடத்த அனுமதி வழங்கியிருப்பதாக ரஜினி குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர்- நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரளான ரசிகர்கள் பங்கேற்றனர்.