​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்..!

Published : Dec 08, 2019 6:03 AM

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்..!

Dec 08, 2019 6:03 AM

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஒன்பது மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறும். 4 பதவியிடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.