​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை

Published : Dec 07, 2019 8:50 PM

உள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை

Dec 07, 2019 8:50 PM

உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, கூட்டணி கட்சிகளுடன் அதிமுகவினர் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம்  நடைபெற்றது.

சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.