​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேகமாக நிரம்பும் வைகை அணை - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published : Dec 07, 2019 6:17 PM

வேகமாக நிரம்பும் வைகை அணை - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Dec 07, 2019 6:17 PM

வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டி வருவதால் கரையோர மக்களுக்கு தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் வருகிறது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68.83 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு1670 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2090 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5573 மி. கனஅடியாக உள்ளது.

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வைகை ஆற்றுப்பாதையில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.