​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை - அமைச்சர் தங்கமணி

Published : Dec 07, 2019 6:02 PM

கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை - அமைச்சர் தங்கமணி

Dec 07, 2019 6:02 PM

மின்துறையில் உள்ள கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தட்கல் மின் இணைப்பு முறை விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

ஆண்டுக்கு 20 ஆயிரம் தட்கல் மின் இணைப்பு வழங்க உள்ளதாக அவர் கூறினார். மின் துறையில் கேங்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு உடல்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.