​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தானை கையாள எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - ராஜ்நாத் சிங் பேச்சு

Published : Dec 07, 2019 5:54 PM

பாகிஸ்தானை கையாள எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - ராஜ்நாத் சிங் பேச்சு

Dec 07, 2019 5:54 PM

பயங்கரவாதத்தை பரப்பும் பாகிஸ்தானிடம் எச்சரிக்கை இருக்க வேண்டுமென ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார்.

உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு பெற்ற அதிகாரிகள் மத்தியில் பேசிய அவர், பயங்கரவாத த்தை வளர்ப்பதை பாகிஸ்தான் தேசிய கொள்கையாகவே கடைபிடித்து வருகிறது என்றார்.

பயிற்சி முடித்து ராணுவத்தில் பணியாற்ற உள்ள அதிகாரிகள், பாகிஸ்தானிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவிடம் பல முறை தோற்றாலும் கூட, இன்னுமும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்ப்பதை கைவிட வில்லை என அவர் குறிப்பிட்டார். எனவே பாகிஸ்தான் போன்ற அண்டை நாட்டை கையாள நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.