​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...

Published : Dec 07, 2019 5:33 PM

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...

Dec 07, 2019 5:33 PM

மிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கும், 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,  கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறில் 6 செ.மீட்டரும், திருப்பூண்டியில் 5 செ.மீட்டரும், மாமல்லபுரத்தில் 3 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலூர், தஞ்சாவூர்,திருவாரூர்,ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.