​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுக்குமாடிக் குடியிருப்பில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை தொடர்பான காட்சிகள் வெளியீடு

Published : Dec 07, 2019 4:11 PM



அடுக்குமாடிக் குடியிருப்பில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை தொடர்பான காட்சிகள் வெளியீடு

Dec 07, 2019 4:11 PM

தாம்பரம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவேறு வீடுகளில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் மென்பொறியாளர் முருகன், குடும்பத்துடன் கோவை சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கம், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளையன், மற்றொரு மென்பொறியாளரான சந்தோஷ் என்பவரது வீட்டிலும் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றான்.

பின்னர் கொள்ளையன் சுவர் ஏறி குதித்து தப்பிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.