​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிரவ்மோடியின் ரூ.2,400 கோடி சொத்துக்களை விற்க நடவடிக்கை

Published : Dec 07, 2019 4:06 PM

நிரவ்மோடியின் ரூ.2,400 கோடி சொத்துக்களை விற்க நடவடிக்கை

Dec 07, 2019 4:06 PM

வைர வணிகர் நிரவ்மோடியின் 2400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய நிரவ் மோடி, கடந்த மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் நிரவ்மோடியை தேடப்படும் குற்றவாளி என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து நிரவ்மோடியின் 2400 கோடி ரூபாய் மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரும் 10 ஆம் தேதி அந்த மனு விசாரணைக்கு வர இருக்கிறது. முதற்கட்டமாக வொர்லி பகுதியில் உள்ள 2 வீடுகளை ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது.