​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Published : Dec 07, 2019 2:58 PM

டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Dec 07, 2019 2:58 PM

டென்மார்க் டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலக தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அவர், மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் 30 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலக தர வரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாக 71 வாரங்கள் இருந்துள்ளார். ஒலிம்பிக்கில் டென்மார்க் சார்பில் 3 முறை பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ஆஸ்திரேலிய ஓபனுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.