​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வார்னருக்கு வழங்கியிருக்க வேண்டும் - லாரா

Published : Dec 07, 2019 2:42 PM

உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வார்னருக்கு வழங்கியிருக்க வேண்டும் - லாரா

Dec 07, 2019 2:42 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் தமது உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ஆஸ்திரேலிய வீரர் வார்னருக்கு வழங்கியிருக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் லாரா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வார்னர் 335 ரன்களுடன் களத்தில் இருந்தபோது, லாராவின் 400 ரன்கள் உலக சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததால் அந்த வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில், மும்பையில் பேட்டியளித்த லாரா, ஒருநாளுக்கு முன்பே போட்டி முடிந்ததை சுட்டிக்காட்டி, வார்னருக்கு உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.