​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை

Published : Dec 07, 2019 10:22 AM

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை

Dec 07, 2019 10:22 AM

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்க நைஜிரீயா அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

நைஜிரீயா அருகேவுள்ள போன்னி தீவில் ((Bonny Island)) இருந்து 77 கடல் மைல் தூரத்தில் ((நாட்டிங்கல்)) இந்தியாவின் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கிரேக்க நாட்டு கப்பலை கடற்கொள்ளையர்கள் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனர்.

அதிலிருந்த 18 இந்திய மாலுமிகள், ஒரு துருக்கி மாலுமியும் கடத்தப்பட்டனர். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், நைஜிரீய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பதிலளித்தார்.