​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரவுடி பேபி பாடல் YouTube-ல் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது

Published : Dec 07, 2019 8:32 AM

ரவுடி பேபி பாடல் YouTube-ல் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது

Dec 07, 2019 8:32 AM

நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடல், ஜனவரி 2ந் தேதி யூ டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் 7 வது இடத்தையும் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக இந்தப் பாடலுக்கு நடனக் காட்சிகளை அமைத்த இயக்குநர் பிரபுதேவாவுக்கு ஏகமாக பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நிலையில் யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பாடல் என்கிற சாதனையையும் அடைந்தது.

ஏப்ரல் மாதம், யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் 40 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியது. இதனால் யூடியூபில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்கிற பெருமையையும் அடைந்தது.

தற்போது 72 கோடி பார்வைகளைப் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது ரவுடி பேபி பாடல். இதுதவிர உலகளவில் அதிகம் பேர் பார்த்த விடியோக்களில் ரெளடி பேபிக்கு 7-ம் இடம் கிடைத்துள்ளது