​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் 4 மறு ஆய்வு மனுக்கள்

Published : Dec 07, 2019 8:29 AM

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் 4 மறு ஆய்வு மனுக்கள்

Dec 07, 2019 8:29 AM

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், மிஷாபுதீன், மவுலானா ஹஸ்புல்லா, ஹாஜி மெஹ்மூத் ஆகியோரின் சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டால் வழக்கறிஞர் ராஜீவ் தவான் முஸ்லீம்கள் சார்பில் வாதாட உள்ளார். மசூதிக்குள் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட சிலையை வைத்து ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதிப்பதை எதிர்த்தும், 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை எதிர்த்தும் இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.