​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக சிவசேனா கூட்டணி முறிந்த பின்னர் பிரதமர் மோடி - உத்தவ் தாக்கரே முதல் சந்திப்பு

Published : Dec 07, 2019 6:41 AM



பாஜக சிவசேனா கூட்டணி முறிந்த பின்னர் பிரதமர் மோடி - உத்தவ் தாக்கரே முதல் சந்திப்பு

Dec 07, 2019 6:41 AM

காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க புனே வந்த பிரதமர் மோடியை மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வரவேற்றார்.

அண்மையில் மகாராஷ்ட்ர சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்றபோதும் சிவசேனா கூட்டணியை முறித்துக் கொண்டதால் தேவேந்திர பத்னாவிஸ் தலைமையில் பொறுப்பேற்ற புதிய அரசு மூன்றே நாட்களில் கவிழ்ந்தது. தொடர்ந்து தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் முதன்முறையாக புனேயில் மாநில காவல்துறை டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நேற்றிரவு விமானம் மூலம் மோடி புனே வந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ,முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.