​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈகுவாடார் நாட்டில் நித்தியானந்தா இல்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு

Published : Dec 06, 2019 7:53 PM

ஈகுவாடார் நாட்டில் நித்தியானந்தா இல்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு

Dec 06, 2019 7:53 PM

ஈகுவாடார் நாட்டில் நித்தியானந்தா இல்லை என்று அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான ஈகுவடார் தூதரகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தங்கள் நாட்டில் நித்தியானந்தா இருப்பதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது.

நித்தியானாந்தா தங்களது நாட்டில் இல்லை என்றும், அவர் அடைக்கலம் கோரிய போது அதனை நிராகரித்து விட்டதாகவும், இதனால் ஈகுவாடாரில் இருந்து அவர் சென்று விட்டதாகவும் குறிப்பிடப்ட்டுள்ளது.

மேலும் நித்தியானந்தா நிலமோ, தீவோ வாங்க ஈகுவடார் அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், அவர் ஈகுவாடாருக்கு உட்பட்ட எல்லைக்குள்ளோ, தென் அமெரிக்காவுக்கு அருகிலோ, தொலைவிலோ எந்த தீவையும் வாங்க ஈகுவாடார் அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.