​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொள்ளையர்களால் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் 15 நாட்களுக்கு பின் உயிரிழப்பு

Published : Dec 06, 2019 5:41 PM

கொள்ளையர்களால் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் 15 நாட்களுக்கு பின் உயிரிழப்பு

Dec 06, 2019 5:41 PM

சென்னையில் கொள்ளையர்களால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த பெண், 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எவ்வித பலனின்றி அவர் உயிரிழிந்தார்.

கடந்த 22ம் தேதி பொழிச்லூரை சேர்ந்த முருகலஷ்மி என்பவர் தனது மகனுடன்  இருசக்கர வாகனத்தில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு வந்த இருவர், முருகலஷ்மியின் கையில் இருந்த கைப்பையை பறிக்க முயற்சித்தனர்.

இதில் எதிர்பாராதவிதமாக முருகலெக்ஷ்மி சாலையில் கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். சிசிடிவி பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.