​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாதவிடாய் நின்ற அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு சலுகை?

Published : Dec 06, 2019 5:12 PM



மாதவிடாய் நின்ற அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு சலுகை?

Dec 06, 2019 5:12 PM

மாதவிடாய் சுழற்சி நிற்கும் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து அரசு இது வரை முடிவு எதுவும் எடுக்கவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், மாதவிடாய் நிற்பது வயது முதிர்வின் அடையாளங்களில் ஒன்று என தெரிவித்தார்.

இந்த நிலையை எட்டும் பெண்களில் பலர் உடல் மற்றும் மனரீதியான அழுத்தங்களை எதிர்கொள்வதாக தெரிவித்த அமைச்சர், அந்த சமயத்தில் அவர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து நிபுணர்களிடம் தீர ஆலோசித்த பின்னர், மத்திய அரசு உரிய முடிவை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.