​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தை மூட்டைக்கட்டி சென்ற கொள்ளையன்

Published : Dec 06, 2019 4:04 PM



கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தை மூட்டைக்கட்டி சென்ற கொள்ளையன்

Dec 06, 2019 4:04 PM

சென்னையில் கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தை மூட்டைக்கட்டி செல்லும் கொள்ளையனின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

நேற்றிரவு சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள துலுக்காத்தம்மன் கோயிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்த மூன்று உண்டியல்களை இரும்பு கம்பியால் உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், உண்டியலை உடைத்து கொள்ளையடித்த அந்த நபர் சில்லறைகளை மூட்டை கட்டி தூக்கி சென்றதும், சில்லறை மூட்டையுடன் கோயில் சுவர் ஏற முடியாததால் அதனை விட்டு விட்டு தப்பியோடும் காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.