​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெனோபாஸ் நிலை என்பது வயது முதிர்வின் வழக்கமான ஒன்று - அமைச்சர் ஸ்மிருதி இரானி

Published : Dec 06, 2019 3:53 PM

மெனோபாஸ் நிலை என்பது வயது முதிர்வின் வழக்கமான ஒன்று - அமைச்சர் ஸ்மிருதி இரானி

Dec 06, 2019 3:53 PM

மெனோபாஸ் நிலையை எட்டிய அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு என கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், மெனோபாஸ் நிலை என்பது வயது முதிர்வின் வழக்கமான ஒன்று என தெரிவித்தார்.

மேலும் இந்த நிலையை எட்டும் பெண்களில் சிலர் உடல் மற்றும் மனரீதியான அழுத்தங்களை எதிர்கொள்வதாக தெரிவித்த அமைச்சர், அது தொடர்பான உறுதியான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் எவ்வித கொள்கைகளையும் வகுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக, அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்டவர்களிடமும், நிபுணர்களிடமும் தீர ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.