​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

Published : Dec 06, 2019 1:48 PM

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

Dec 06, 2019 1:48 PM

குமரிக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகை,புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என கூறியுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீசும் என்பதால், குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.