​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாருக்கு மத்திய அரசின் புதிய பதவி

Published : Dec 06, 2019 1:40 PM



ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாருக்கு மத்திய அரசின் புதிய பதவி

Dec 06, 2019 1:40 PM

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, ஓய்வுபெற்ற தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி கே.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக, இம்மாதம் 3ஆம் தேதியிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், அடுத்த ஓர் ஆண்டிற்கு இந்த பதவியை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள், மாவோயிஸ்டு பாதிப்புள்ள மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்த உள்துறை அமைச்சகத்திற்கான ஆலோசகராக விஜயகுமார் இருப்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு காஷ்மீர் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த கே.விஜயகுமார், அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு பின், அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.