​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊபர் டாக்சிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது - Uber நிறுவனம்

Published : Dec 06, 2019 11:36 AM



ஊபர் டாக்சிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது - Uber நிறுவனம்

Dec 06, 2019 11:36 AM

ஊபர் டாக்சிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊபர் டாக்சிகளில் பயணிக்கும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதுடன், அவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாக பல நாடுகளில் புகார் எழுந்துள்ளது. இதை அடுத்து லண்டன் உள்பட பல நகரங்களில் ஊபரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஊபர் நிறுவனம், 2018 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி, தங்களது டாக்சிகளில்  குற்றச்செயல்கள் 16 சதவிகிதம் குறைந்துள்ளதாக விளக்கம் அளித்திருக்கிறது. இதில் பாதிக்கு மேற்பட்டவை பாலியல் சம்பந்தமானவையாகும்.

2018ம் ஆண்டில் 3000 பாலியல் புகார்கள் தங்களுக்கு வந்ததாக தெரிவித்துள்ள ஊபர் நிறுவனம் 70 நாடுகளில்,கோடிக்கணக்கான பயணிகள் தினமும் ஊபர் சேவையை பயன்படுத்துவதை ஒப்பிடும் போது இது மிகவும் சிறிய விகிதமே என்றும் கூறியுள்ளது.