​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரான்சில் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

Published : Dec 06, 2019 9:48 AM

பிரான்சில் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

Dec 06, 2019 9:48 AM

பிரான்ஸ் நாட்டில் அரசின் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் 8 லட்சம் ஊழியர்கள் வீதிகளில் இறங்கி போராடியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை மாறுபடும் என்றும், ஓய்வூதியத்தை 64 வயதுக்கு முன்னதாக கோரினால் ஓவ்வூதிய தொகை வேறுபடும் என பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதை எதிர்த்து முதலில் சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், போலீசார், விமானநிலைய ஊழியர்கள் என அனைவரும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கி உள்ளனர். இதனால் பிரான்ஸ் நாடு ஸ்தம்பித்தது. நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது