​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகா 15 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 66.59 சதவீதம் வாக்குகள் பதிவு

Published : Dec 06, 2019 9:23 AM

கர்நாடகா 15 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 66.59 சதவீதம் வாக்குகள் பதிவு

Dec 06, 2019 9:23 AM

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது.

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 319 பறக்கும் படைகள், 578 நுண்ணிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

வாக்குச் சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 66.59 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.