​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெங்காயம் இறக்குமதியை துரிதப்படுத்த முடிவு

Published : Dec 06, 2019 6:37 AM

வெங்காயம் இறக்குமதியை துரிதப்படுத்த முடிவு

Dec 06, 2019 6:37 AM

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. வெங்காய இறக்குமதியை துரிதப்படுத்துவது, பதுக்கலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன.

வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வட மாநிலங்களில் கிலோ 100 ரூபாய் முதல் 180 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படும் நிலையில் மத்திய அரசு விலையை கட்டுக்குள் கொண்டு வர ஈராக், துருக்கி, போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இறக்குமதியாகும் 35 ஆயிரம் டன் வெங்காயம் அடுத்த வாரம் முதல் கிடைக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

எகிப்பு மற்றும் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 17 ஆயிரத்து 90 டன் வெங்காயம் வரும் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் இந்தியா வந்து விடும் என்று நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ்பாஸ்வான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தவிர மேலும் 19 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆய்வு கூட்டம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அலுவலர்களும் கலந்து கொண்டனர். வெங்காய இறக்குமதியை துரிதப்படுத்துவது , வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே பஞ்சாப் மாநிலம் லுதியானாவின் காய்கறி சந்தையில் வெங்காயம் விலை உயர்வைக் கண்டு பொதுமக்கள் பெரும் வேதனை தெரிவித்தனர். வெங்காயம் இல்லாத சமையலுக்கு பழகிக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர். சாட் கடைகளிலும் உணவகங்களிலும் கூட வெங்காயம் கிடையாது என்ற அறிவிப்பு பலகைகள் காணப்படுகின்றன.4 அல்லது 5 கிலோ வெங்காயம் வாங்குவோரும் இப்போது அரை கிலோ போதும் என்று வாங்கிச் செல்கின்றனர்.