​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகை ரம்யா பாண்டியன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு

Published : Dec 05, 2019 7:06 PM

நடிகை ரம்யா பாண்டியன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு

Dec 05, 2019 7:06 PM

தமது பெயரில் போலி டுவிட்டர் கணக்கை தொடங்கி யாரோ ஆபாச படங்கள் வெளியிடுவதாக, நடிகை ரம்யா பாண்டியன் புகார் கூறியுள்ளார்.

‘ஜோக்கர்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வீட்டு மொட்டை மாடியில் சேலை கட்டிய படி அமர்ந்து அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் பெயரில் விஷமிகள் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி உள்ளதாகவும், அதில் சில நிர்வாண படங்களை சிலர் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் ரம்யா பாண்டியன் கூறியுள்ளார். டுவிட்டரில் தமது பெயரில் போலி கணக்குகள் தொடங்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.