​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் உள்ளது - ப.சிதம்பரம்

Published : Dec 05, 2019 6:44 PM

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் உள்ளது - ப.சிதம்பரம்

Dec 05, 2019 6:44 PM

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் உள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான பின்னர் முதல் முறையாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.

பொருளாதார சரிவை மத்திய அரசு தவறாக மதிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார். 8 சதவீதத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்து விட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் 5 சதவிகித அளவுக்கு வளர்ச்சி அடைந்தாலே பெரிய அதிசயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ரிசர்வ் வங்கியே படிப்படியாக குறைத்து விட்டதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.