​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்றத்துக்கு ஓடிச் சென்ற அமைச்சர்..

Published : Dec 05, 2019 4:10 PM



நாடாளுமன்றத்துக்கு ஓடிச் சென்ற அமைச்சர்..

Dec 05, 2019 4:10 PM

நாடாளுமன்றத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஓடிச் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இது முடிந்ததும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது பியூஷ் கோயல் நாடாளுமன்றம் வருவதற்கு தாமதம் ஆனது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கும்போது அமைச்சர்கள் உள்ளே இருக்க வேண்டும் என்பதால், காரைவிட்டு இறங்கியதும் அவர் வேகமாக ஓடினார்.

image

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

image