​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுங்கச்சாவடிகள் மூலம் கொட்டும் வருமானம்...

Published : Dec 05, 2019 4:00 PM

சுங்கச்சாவடிகள் மூலம் கொட்டும் வருமானம்...

Dec 05, 2019 4:00 PM

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சங்கச்சாவடிகள் மூலம் மாதம் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 212 கோடி ரூபாய் வசூலாகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இதைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் 54 சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றின் தினசரி சராசரி வருமானம் 6 கோடியே தொன்னூற்று எட்டு லட்சம் ரூபாய் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் தமிழகத்தில் இருந்து சாலைப் போக்குவரத்து சுங்க வரியாக 2 ஆயிரத்து 549 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் 570 சுங்கச்சாவடிகள் உள்ளதாக கூறிய நிதின் கட்கரி, 2018- 19 நிதியாண்டில் அவற்றின் மூலம் கிடைத்த வருமானம் 24 ஆயிரத்து396 கோடி ரூபாய் என்றும் தெரிவித்திருக்கிறார்.