​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
1 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைப்பீர்களா? அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

Published : Dec 05, 2019 3:49 PM



1 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைப்பீர்களா? அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

Dec 05, 2019 3:49 PM

மதுரையில் 27 கிலோ மீட்டருக்குள் 3 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்ட விவகாரத்தில், மாநில நெடுஞ்சாலை எனில் 1 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்படுமா? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த இம்மானுவேல், வழக்கறிஞர் விஜயாராணி ஆகியோர் தனித்தனியே தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையின்போது, 3 சுங்கச்சாவடிகள் அமைந்த பகுதி தேசிய நெடுஞ்சாலையா? மாநில நெடுஞ்சாலையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசுத்தரப்பில், மாநில நெடுஞ்சாலை என பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசும், தமிழக சாலை மேம்பாட்டு கழக கண்காணிப்பு பொறியாளரும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 11ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.