​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைவு

Published : Dec 05, 2019 3:19 PM

சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைவு

Dec 05, 2019 3:19 PM

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோவுக்கு ரூபாய் 30 வரை விலை குறைந்துள்ளது.

இன்று பச்சை சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 60 முதல் 100 ரூபாய்க்கு விலை போனது. மேலும் மொத்த விற்பனையில் இருப்பு வைத்திருந்து கொண்டு வரப்பட்ட பழைய சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 100 முதல் 150 ரூபாய்க்கு விலை போனது.

சமீபத்தில் பெய்த மழையால் வெங்காயத்தில அழுகல் ஏற்பட்டுள்ளதால், அவற்றை பறித்து அதிக அளவில் கொண்டு வருவதாகவும், அவற்றை வியாபாரிகள் இருப்பு வைத்து விற்க முடியாது என்பதால், விலை குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் கிலோவிற்கு ரூபாய் 20 முதல் 30 ரூபாய் வரை குறைந்து, நேற்று கிலோ ரூபாய் 80 முதல் ரூபாய் 120 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ரூபாய் 60 முதல், ரூபாய் 100 க்கு விற்பனையாவதாக தெரிவித்தனர்.