​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...

Published : Dec 05, 2019 12:26 PM

தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...

Dec 05, 2019 12:26 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், லட்சத்தீவு பகுதிகளில் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் கடவூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.