​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கயிற்றில் சிக்கி தவிப்பு.. மீட்ட மீனவர்களுக்கு நன்றி தெரிவித்த சுறா

Published : Dec 05, 2019 11:32 AM

கயிற்றில் சிக்கி தவிப்பு.. மீட்ட மீனவர்களுக்கு நன்றி தெரிவித்த சுறா

Dec 05, 2019 11:32 AM

மலேசியாவில் கயிற்றில் சிக்கிக் கொண்ட தன்னைக் காப்பாற்றிய மீனவர்களுக்கு சுறா ஒன்று நன்றி கூறிய வீடியோ வெளியாகி உள்ளது.

சரவாக் என்ற இடத்தில் உள்ள பின்டுலு கடற்பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திமிங்கலச் சுறா எனப்படும் மீன் ஒன்று பெரிய அளவிலான கயிறு இறுக்கப்பட்டதால் நீந்த முடியாமல் தவித்தது.

இதனைக் கண்ட மீனவர்கள் மீனின் அருகே சென்று கயிற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போ சுறா மிகவும் அமைதியாக இருந்தது. சில நிமிடங்களுக்கு பின்னர் மீனவர்களை கயிற்றை அறுத்து சுறாவை விடுவித்தனர். அடுத்த நொடியில் உற்சாகமடைந்த சுறா தனது வாலை அங்குமிங்குமாகச் சுழற்றி கடல் நீரை விசிறியடித்த காட்சி, நன்றி தெரிவிப்பதுபோல் இருந்தது.