​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உய்கர் இன மக்கள் தொடர்பாக அமெரிக்கத் தீர்மானத்திற்கு சீன அரசு கண்டனம்

Published : Dec 05, 2019 10:19 AM

உய்கர் இன மக்கள் தொடர்பாக அமெரிக்கத் தீர்மானத்திற்கு சீன அரசு கண்டனம்

Dec 05, 2019 10:19 AM

சீனாவில், உய்கர்(Uygur)இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வலியுறுத்தியும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அமெரிக்கா, தனது நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது.

இதற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதோடு, பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கிறது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் (Xinjiang), தனித்துவ அடையாளங்களோடு வாழும் உய்கர் இன மக்களில், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பெருமளவில் உள்ளனர்.

சிஞ்ஜியாங் மாகாணத்தில், சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் முஸ்லீம் பிரிவினைவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என கூறி வருகிறது. மேலும், தடுப்பு முகாம்களையும், சீன அரசு அமைத்திருப்பதோடு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.