​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை மறுநடவு செய்யும் பணி

Published : Dec 05, 2019 9:23 AM

150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை மறுநடவு செய்யும் பணி

Dec 05, 2019 9:23 AM

திருவள்ளூர் அருகே 150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வேரோடு பிடுங்கி கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் நடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிக்காக ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததாகக் கூறப்படும் இந்த மரத்தை அகற்றும் நிலை ஏற்பட்டது.

இதனையறிந்த ஓசை என்கிற தனியார் அமைப்பு, ஆலமரத்தை அப்படியே வேருடன் அகற்றி கொசஸ்தலை ஆற்றில் நட முடிவு செய்தது. மரத்தை நடவு செய்ய தேர்வான இடத்தில் 4 நாட்களாக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமையன்று பொக்லைன் உதவியுடன் வேருடன் மரம் அகற்றப்பட்டது. தொடர்ந்து மரத்தை மறுநடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.