​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செம்மரக் கடத்தல் கும்பலுக்கு இடையில் நடந்த சண்டையில் பெண் உயிரிழப்பு

Published : Dec 05, 2019 8:51 AM

செம்மரக் கடத்தல் கும்பலுக்கு இடையில் நடந்த சண்டையில் பெண் உயிரிழப்பு

Dec 05, 2019 8:51 AM

வாணியம்பாடி அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்தி வந்தததாகக் கூறப்படும் கும்பலுக்கும் இடைத்தரகருக்கும் இடையே நடந்த மோதலின்போது தடுக்க வந்த இடைத்தரகரின் மனைவி அடிபட்டு உயிரிழந்தார்.

பூங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன், தனது நண்பரான அசோகன் என்பவர் மூலம் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டிக் கடத்தி வருவதற்காக 7 பேரை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

செம்மரங்களை வெட்டிக் கடத்தி வந்த பிறகு பேசிய பணத்தை 7 பேருக்கும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், செவ்வாய்கிழமை அவர்கள் சீனிவாசனிடம் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது தடுக்க வந்த சீனிவாசனின் மனைவி சாந்திப்பிரியாவை அந்த கும்பல் நெட்டித் தள்ளியதில் அடிபட்டு அவர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் உரியவர்களை கைது செய்யக் கோரி சாந்திப்பிரியாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி, இளையராஜா, பழனி ஆகிய 3 பேரை கைது செய்துள்ள போலீசார் 4 பேரை தேடி வருகின்றனர். செம்மரம் வெட்டிக் கடத்தப்பட்டது உண்மையா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.