​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பாதுகாப்புக்கு உதவிடும் ரிசாட் 2 பிஆர் 1 செயற்கைக் கோள் ஏவப்படுகிறது

Published : Dec 05, 2019 8:20 AM

இந்திய பாதுகாப்புக்கு உதவிடும் ரிசாட் 2 பிஆர் 1 செயற்கைக் கோள் ஏவப்படுகிறது

Dec 05, 2019 8:20 AM

இந்திய பாதுகாப்புத்துறைக்கு உதவிடும் நோக்கிலும், பூமியின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கும் ரிசாட் 2 பிஆர் 1 (RISAT-2BR1)என்ற செயற்கைக் கோளை வரும் 11 தேதி செலுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில், ரிசாட் 2 பிஆர் 1 செயற்கைக் கோளுடன் மேலும் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 9 செயற்கைக் கோள்களையும் அனுப்ப தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 11ம் தேதி செலுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது செலுத்தப்பட உள்ள இந்த செயற்கைக் கோள் ரிசாட் 2 பி தொடரின் இரண்டாவது பெரிய செயற்கைக் கோள் ஆகும். பிஎஸ்எல்வி 48வது ராக்கெட் மூலம் செலுத்தப்படும் இந்த செயற்கைக் கோள் இஸ்ரோவின் 50வது செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத்தக்கது.