​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை..!

Published : Dec 04, 2019 8:16 PM



ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை..!

Dec 04, 2019 8:16 PM

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடை முறைகேடாக பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் 100 நாள்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீன்கோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தனர்.

ஜாமீனில் இருக்கும் காலத்தில் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, நீதிமன்ற அனுமதியில்லாமல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளக் கூடாது உள்ளிட்ட நிபந்தனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கெனவே சிபிஐ  வழக்கிலும் ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில், அமலாக்கத் துறை வழக்கிலும் தற்போது சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், டெல்லி திகார் சிறையிலிருந்து சிதம்பரம் விடுதலை ஆனார். சிறை வாயிலில் அவருக்கு காங்கிரசார் வரவேற்பு அளித்தனர்.