​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வு முறைகேட்டில் ஜாமீன் பெற்ற 3 மாணவர்களுக்கான நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவு

Published : Dec 04, 2019 7:55 PM

நீட் தேர்வு முறைகேட்டில் ஜாமீன் பெற்ற 3 மாணவர்களுக்கான நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவு

Dec 04, 2019 7:55 PM

நீட் தேர்வு முறைகேட்டில் ஜாமீன் பெற்ற 3 மாணவர்களுக்கான நிபந்தனையை தளர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள், தந்தை என பலரும் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதுவரை 4 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீனும், ஒரு மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜாமீன் வழங்கிய போது விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தக் கோரி, உதித் சூர்யா, ராகுல் டேவிஸ், பிரவீன் ஆகிய 3 மாணவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 3 பேருக்கும் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டார்.